×

ஓதுவார்கள் ஊதியம் தொடர்பான அவமதிப்பு வழக்கு - அரசு தூங்குகிறது : ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: ஓதுவார்கள் ஊதியம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு தூங்குவதாக ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம், தென்காசியை சேர்ந்த சிங்காரவேலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஓதுவார் குடும்பத்தை சேர்ந்த நான், இளஞ்சி குமாரர் கோயிலில் ஓதுவாராக பணியாற்றுகிறேன். திராவிட வேதங்களான தேவாரம், திருவாசகத்தை கோயிலில் பாடுகிறேன். தற்போது ரூ.9,900 சம்பளம் வாங்குகிறேன். அரசாணைப்படியான சம்பள உயர்வு இல்லை. பல ஓதுவார்கள் அரசாணைப்படி அதிக சம்பளம் வாங்கும்போது, எனக்கு மட்டும் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. என்னைப்போன்ற ஓதுவார்களால்தான் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவை பாடப்படுகிறது. இதனால் தமிழ் கலாச்சாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே, அரசாணைப்படி சம்பளம் வழங்க வேண்டுமென வழக்கு தொடர்ந்திருந்தேன்.

இதில், அரசு ஊழியர்களை ேபால ஓதுவார்களையும் கருதி, அவர்களுக்கு இணையான சம்பளத்தை நிர்ணயம் செய்து வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே, அறநிலையத்துறை கமிஷனர், நெல்லை இணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று விசாரித்தார். அப்போது அரசு தரப்பில், நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரருக்கு ஊதியம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இடையில் குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரர் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமுள்ள ஓதுவார்களுக்கும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டுமென்றுதான் உத்தரவிடப்பட்டது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்குகிறது. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு முதன்மை செயலர், அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்டோர் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டிவரும் என எச்சரித்து, விசாரணையை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : remuneration - State ,jury ,branch , The remuneration wages, condemn the branch of the Court
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...