×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயன், மனோஜ் ஜாமின் ரத்து; கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை வழக்கில் இருவரின் ஜாமினை ரத்து செய்யுமாறு போலீஸ் தரப்பில் கோரியது. போலீசின் மனுவை ஏற்ற உதகை நீதிமன்றம் இருவரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது.  மேலும் சயன், மனோஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டு, கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 18-ம் தேதி ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில்,  காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

இதில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். கோடநாடு கொலை வழக்கில் சயன், மனோஜ் இருவரின் ஜாமினை ரத்து செய்யுமாறு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. போலீசின் மனுவை ஏற்ற உதகை நீதிமன்றம் இருவரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Kodanad ,jail ,tribunal court ,Manoj ,Cyan , Kodanad, murder, robbery, Chief Minister Edappadi Palanisamy, Siyan, Manoj, Police, Jamin
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4...