×

89 அணைகளில் புணரமைப்பு திட்டம் .. ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள்.. நீர்வளத்துறையில் முக்கிய அறிவிப்புகள்

சென்னை :  ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயரில் கல்லூரி, விவசாயிகளுக்கான பயர்க்கடன், சென்னையில் பிரமாண்ட கார் மற்றும் பைக் பார்க்கிங் வசதி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கின்றன. மத்திய பட்ஜெட் கடந்த 1-ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் வருவதால் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் 8வது முறையாக தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த இவர், ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் அறிவித்த நீர்வளத்துறை சார்ந்த அறிவிப்புகளை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

*தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் ரூ.745.49 கோடி செலவில் புணரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 37 அணைகளில் கட்டமைப்பை புணரமைக்கும் பணிகளை 2வது கட்டமாக மேம்படுத்தப்படுகிறது.

*2019-20 பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

*ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

*ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.

*குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறுசீரமைக்கப்படுகிறது.

*சிதம்பரம் வட்டாரம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படுகிறது.

*பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Announcements , Floods, works, water resources, announcements
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி...