×

முருங்கை காய் சீசனுக்கு தயாராகும் அரவக்குறிச்சி : காய் பிடிக்கும் அறிகுறியாக பூக்கள் பூத்து குலுங்குகின்றன

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய் சீசனுக்கு தயாராகி வருகிறது. மரத்தில் காய் பிடிக்க பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்கள் சுவை மற்றும் திரட்சியின் காரணமாக தமிழகம் மட்டும் அல்லாது அன்டை மாநிலத்திலும் கூட பிரசித்தி பெற்றது. மரமுருங்கை, கொடி முருங்கை என இரு வகைகள் உள்ளது. இந்த இரு வகை முருங்கையுமே இப்பகுதியில் பயிரிடப்படுகின்றது. ஆண்டின் முதல் சீசன் மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதம் வரை நீடிக்கும். மார்ச் மாத இறுதியில் அறுவடைக்கு தயாராவதற்கு முருங்கை மரங்களில் இப்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது.

அரவக்குறிச்சியில் பகுதியில் ஊத்தூர், கொத்தப்பளையம், தடாகோவில், வெஞ்சமாங்கூடலூர், ஈசநத்தம், அம்மாபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிறிட்டுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட முருங்கை காய்களை விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் ஏல முறையில் வாங்குவார்கள். பின்னர் சென்னை உட்பட தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு,  காக்கிநாடா, விசாகபட்டினம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். இது தொடர்பாக முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு முருங்கை சீசன் சிறப்பாக இருக்குமென்று தெரிகிறது. உரிய காலத்தில் பூக்கள் பூத்து விட்டது. இதனால் நல்ல விளைச்சலும், கூடுதல் விலையும் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Blues ,drumstick season , Drumstick, Aravakurichi, flowers
× RELATED இளமை துள்ளலுடன் வெளியான “ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடல்!