×

ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை படைத்த ரோகித் சர்மா

ஆக்லாந்து: சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இப்போட்டிக்கு முன்னர் 3வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் ரோகித் சர்மா 2288 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்திலும்(2272 ரன்), 3-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கும் (2263) உள்ளனர்.  இந்த பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி(2167 ரன்) 4-வது இடத்தில் உள்ளார்.

அதிக அரைசதம்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி 20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் கோலியை முந்தினார் ரோகித். இவர் இதுவரை 20 அரைசதங்கள் அடித்துள்ளார். கோலி 19 அரைசதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

அதிக சிக்ஸர்
இதேபோல் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இதுவரை மொத்தம் 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 103 சிக்ஸர்கள் அடித்து விண்டீசின் கிறிஸ் கெயிலும், நியூசிலாந்தின் மார்டின் குப்திலும் முதல் இடத்தில் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rohit Sharma ,match , New Zealand vs India, 2nd T20I
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...