×

தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் : வெள்ளரி, முட்டைகோஸ் நாசம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வெள்ளரி, முட்டைகோஸ் பயிர்கள் நாசமானது.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூர் வனப்பகுதியில் முகாமிட்டவாறு அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை வனப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்த வந்த 30 யானைகளை இரு தினங்களுக்கு முன்பு ஜவளகிரி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

இந்நிலையில், நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 10 யானைகள் நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்தன. கங்கதேவனப்பள்ளி கிராமத்திற்கு வந்த யானைகள், அங்குள்ள சுக்கேஷ் மற்றும் மாதேஸ் ஆகியோரது தோட்டங்களில் புகுந்து நான்கு ஏக்கரில் பயிரிட்டிருந்த வெள்ளரி, பூகோஸ் உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்தன. பொழுது புலர்ந்ததும் யானைகள், மீண்டும் காட்டிற்குள் ஓட்டம் பிடித்தன. இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பயிர்சேதத்தை பார்வையிட்டு நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அவர்களிடம், அட்டகாசம் செய்துவரும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : town ,Dhenkanikkottai ,Cuttack , Denkenikottai, elephants, cabbage
× RELATED புதுகும்மிடிப்பூண்டியில் சோகம்...