×

மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக இருக்கும் : ஓ பன்னீர் செல்வம்

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :

*டாஸ்மாக் மூலம் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

*மாநில ஆயத்தீர்வை போக்கினை கருத்தில் கொண்டு ரூ. 7262.33 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

*முத்திரைத்தாள் கட்டண வருவாயில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது.

*முத்திரைத்தாள் தீர்வையாக, வரும் நிதியாண்டில்,ரூ.11512.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

*கடந்த நிதியாண்டை விட 2000 கோடி வருவாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

*வாகனங்கள் மீதான வரி வருவாய் ரூ.  6510.70 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்

*மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state , Budget, text, frame, filing, o panner selvam
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...