×

தமிழக அரசின் மொத்த வருவாய் செலவீனங்கள் ரூ,2,12, 035, 93 கோடியாக இருக்கும் : ஓ பன்னீர் செல்வம்

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :

*வரியல்லாத வருவாய் 13 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

*2019-20ல் மாநில மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

*ஊதிய உயர்வினால் ஏற்படும் நிதிச்சுமை, உதய் திட்டத்தால் ஏற்படும் கூடுதல் பொறுப்பு போன்றவை தொடரும்

*மின் மாநிலம், உணவு மானியம், சமூக நலத்திட்டங்களின் கீழ் வரும் ஓய்வூதியங்கள் போன்ற திட்டங்கள் தொடரும்

*மொத்த வருவாய் செலவீனங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35.93 கோடி ரூபாயாக இருக்கும்

*இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314.76 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

*மூலதன செலவுகளுக்கு அரசு எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்துள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government of Tamil Nadu ,O Pannir Selvam , Budget, speech, assembly, filing, O Paneer Selvam
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...