×

தமிழக பட்ஜெட் 2019-20: காவல்துறைக்கு ரூ.8,084 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக காவல்துறைக்காக பட்ஜெட்டில் ரூ.8,084 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கணினி இணைப்பு திட்டத்தால் காவல்துறை நவீனமாயக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும் காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக காவல்துறை மிக சிறப்பாக செயல்படுகிறது. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காவல்துறைக்கு ரூ.8,084 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ407.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu Budget, Legislative Assembly, OPS, AIADMK, DMK,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி