×

தமிழக பட்ஜெட் 2019-20: மீன்வளத்துறைக்கு 927.85 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத்துறைக்காக பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆபத்து காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்.  80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பினைத் தடுக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீரோடி, மார்த்தாண்ட துறை ஆகிய இடங்களில் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கப்படும். ஒக்கி புயலுக்கு பிறகு மீனவர்களிடமிருந்து கரையோரத்திற்கு சீரான தொலைதொடர்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.170.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி, திருவெற்றியூர் குப்பத்தில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TNAU , Tamil Nadu Budget, Legislative Assembly, OPS, AIADMK, DMK,
× RELATED ஊரடங்கால் அதிகரித்து வரும் கணவன்...