தமிழக பட்ஜெட் 2019-20 : சென்னை சுற்றுவட்டாரங்களில் ஆற்றங்கரையோரம் உள்ளவர்களுக்கு ரூ.4,647 கோடி செலவில் 38 ஆயிரம் குடியிருப்புகள்

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :

* சென்னையை சுற்றியுள்ள வனப்பகுதிகளை மேம்படுத்த ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு

* வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் ரூ.2,000 கோடி செலவில் சென்னையில் செயல்படுத்தப்படும்

* ஸ்ரீபெரும்பதூர் அருகே ஒரத்தூர் அடையாற்றில் நீர்தேக்கம் அமைக்கப்படும்

* அடையாறு மற்றும் கூவம் ஆற்றை சீரமைக்க 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* ரூ.2,000 கோடியில் சென்னையில் மல்டி லேவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்

* சென்னை சுற்றுவட்டாரங்களில் ஆற்றங்கரையோரம் உள்ளவர்களுக்கு ரூ.4,647 கோடி செலவில் 38 ஆயிரம் குடியிருப்புகள்

இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suburbs ,residents ,Chennai , Tamil Nadu budget, Chennai, apartments
× RELATED அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில்...