×

நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் : ஓ பன்னீர் செல்வம்

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :

*75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்

*விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

*விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்

*தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

*நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

*கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : promotion ,O Pannir , Budget, text, frame, filing, o Pannir riches, text
× RELATED கள்ளர் மேல்நிலைப்பள்ளி குழு...