×

பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும் : ஓ பன்னீர் செல்வம்

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :

* கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

*சிதம்பரம் வட்டாரம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்.

*நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

*பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்.

*குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறுசீரமைக்கப்படும்

*ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : saltpit ,O Pannir ,Pichavaram , Budget, text, frame, filing, o Pannir riches, text
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...