×

திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துகூறி பெரம்பூர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். இவர், தினமும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக்கூறி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி, அனைத்து முதி யோருக்கும் உதவித்தொகையாக மாதம் 1500 வழங்கப்படும்.  கொரோனா  நிவாரண தொகை 4 ஆயிரம் வழங்கப்படும். மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் எரிவாயு மானியம்  100 ரூபாய் வழங்கப் படும். பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை பொது மக்களுக்கு வழங்கினார்.வாக்கு சேகரிப்பின்போது  பகுதி செயலாளர் ஜெயராம். வட்ட செயலாளர் ஏ.ஆர்.ஆர்.மலைச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்….

The post திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துகூறி பெரம்பூர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,RD Shekhar ,DMK ,Perambur Legislative Assembly Constituency ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது