×

பாகிஸ்தான் எரிசக்தி துறையில் ரஷ்யா ரூ.1 லட்சம் கோடி முதலீடு

இஸ்லாமபாத்: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில், ரஷ்யா ரூ.1 லட்சம் கோடி அளவில் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதனால் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் சீனா மற்றும் ரஷ்யாவிடம் நெருங்கி வருகிறது. இதையடுத்து பாகிஸ்தானின் எரிசக்தி துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து லாகூர் வரை கடலுக்குள் காஸ் பைப்லைன் அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ள ரஷ்ய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தம் செய்துள்ளன. பஞ்சாப் பகுதி மக்களின் காஸ் தேவையை நிறைவு செய்வதற்காக இந்த பைப்லைன் திட்டம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் காஸ் பாகிஸ்தானின் பஞ்சாப் வரை கொண்டு செல்ல முடியும். ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கு காஸ் பைப் அமைக்கும் திட்டம் குறித்தும் ரஷ்ய நிறுவனம் ‘காஸ்ப்ரோம்’ ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia , Russia,invested, Rs 1 lakh crore, energy sector
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...