×

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர்

சென்னை: சென்னையில் நடைபெறும் ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினர். சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி விளையாட்டரங்களில் ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியில்  பிரான்சு, எகிப்து, கொரியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், போர்ச்சுகல், ெஜர்மனி,  சீன தைபே, சீனா, நியூசிலாந்து, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  நேற்று  காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடைப்பெற்றன. இந்த போட்டி ஒன்றில் இந்தியாவின்  பிரஜ்னேஷ்  குணேஸ்வரன் - அர்ஜூன் கடே ஜோடி மோதியது.

 முதல் சுற்றின் ஆரம்பத்தில்  அர்ஜூன் கடும் போட்டியாக இருந்தாலும், இறுதியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் குணேஸ்வரன் கைப்பற்றினார். அதனால் அர்ஜூன் சோர்ந்துப் போக 6-2 புள்ளி கணக்கில் வீழ்த்தினர்.முடிவில் குணேஸ்வரன் 6-4, 6-2 என்ற நேர் செட்களில்  அர்ஜூனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொருபோட்டியில் இந்தியாவின்  சசிகுமார் முகுந்த் நேற்று எகிப்து நாட்டின் முகம்மது சப்வாத்துடன் மோதினர். அந்தப்போட்டியில் சசிகுமார்  6-3, 6-4 என்ற நேர் செட்டில்   முகம்மது சப்வாத்தை வீழ்த்தி காலிறுதியில் விளையாட உள்ளார்.இன்று காலிறுதிப்போட்டிகளும், நாளை அரையிறுதிப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டிகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dennis ,ATP ,quarterfinals , ATP Challenger,Dennis,advanced, quarterfinals
× RELATED ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர்:...