×

தென் ஆப்ரிக்கா டி20 பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுடனான டி20 கிரிக்கெட் தொடரில் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றிப் பெற்றது.தென் ஆப்ரிகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி  டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா வென்றது. ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது. இந்நிலையில் 3 டி20 போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதின. அதில் முதல் 2  போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வென்று டி20 தொடரையும் கைப்பற்றியது.

கடைசிப் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியனில் நடைப்பெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்தது.  தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான்  27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களை இழந்தாலும் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றிப் பெற்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : South Africa ,Pakistan , South Africa,T20, Pakistan ,comfort win
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...