×

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற உள்ள 16 பேர் கொண்ட வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடர்களை முதல்முறையாக வென்று சரித்திரம் படைத்தது. மேலும் டி20 தொடரை சமன் செய்ததது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அது இந்தியாவில் 2 டி20  போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி பிப்.24ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2வது போட்டி பிப்.27ம ்தேதி  பெங்களூரிலும் நடைபெறும்.

ஒருநாள் போட்டிகள்  மார்ச் 2ம் தேதி ஐதராபாத்திலும், மார்ச் 3 நாக்பூரிலும்,  மார்ச் 8ம் தேதி  ராஞ்சியிலும்,  மார்ச் 10ம் தேதி மொஹாலியிலும், மார்ச் 13ம் தேதி டெல்லியிலும் நடைபெற உள்ளன.  இந்தப் போட்டிகளில் விளையாட உள்ள  ஆரோன் பின்ச் தலைமையிலான 15 பேர் கொண்ட கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர்கள்  நேற்று அறிவிக்கப்பட்டன. அணியில்  ஆரோன் பின்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா,  ஷான் மார்ஷ்,  பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்,  கிளேன் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர்,  மார்கஸ் ஸ்ேடானிஸ்,  அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், நாதன் கவுள்டர், கேன் ரிச்சர்ட்ஸ்சன், ஜாசன் பெஹரன்டர்ப், நாதன் லயன்,  ஜேய் ரிச்சர்ட்ஸ்சன், ஆடம் ஜம்பா, டீஆர்சி ஷார்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,squad ,Australia , India,announces ,Australia ,squad
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி