×

இன்று 2வது டி20 கிரிக்கெட் வெல்லும் நோக்கில் நியூசி.: வீழ்த்தும் முனைப்பில் இந்தியா

ஆக்லாந்து: இந்தியா - நியூசிலாந்து  இடையில் இன்று நடைபெற உள்ள 2வது டி20 கிரிக்கெட்  போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கில் நியூசிலாந்தும், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியாவும் களம் காண உள்ளன.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா  5 ஒருநாள், 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனைப் படைத்துள்ளது. வெலிங்கடனில் நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி–்யடைந்தது. இந்நிலையில் 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கு ஆடுகளத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்ல 2 அணிகளும்  நேற்று தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டனர்.இந்தப் போட்டியை வெல்வதின் மூலம் நியூசிலாந்து டி20 தொடரை கைப்பற்றும். அத்துடன் ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்ததற்கு பதிலடியாக இருக்கும். எனவே 2வது டி20 போட்டியை வெல்லும் நோக்கில் நியூசிலாந்து தீவிரமாக உள்ளது. அதற்காக அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம்.

முதல் போட்டியில் சுமாராக விளையாடி கோலின் கிராண்ட்ஹோம்,  டாரில் மிட்செல், ஸ்காட்– குகலெஜின் ஆகியோரில் சிலர் உட்கார வைக்கப்படலாம். ஜேம்ஸ் நீஷேம், பிரேஸ்வெல் ஆடும் அணியில் இடம் பெறலாம்.ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது போன்று   நியூசிலாந்து சுற்றுப் பயணத்தையும் வெற்றிகரமாக முடிக்க இந்தியா முனைப்பு காட்டுகிறது. ஒருநாள் தொடரை வென்றது போல் டி20 தொடரையும் வெல்ல வேண்டும் என்றால் எஞ்சிய 2 போட்டிகளிலும் இந்தியா வென்றாக வேண்டும். அதற்காக  அணியில் பல்வேறு மாற்றங்களை செய்ய இந்தியாவும் திட்டமிட்டுள்ளது. ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவர் மட்டுமின்றி  கலீல் அகமது உட்பட மேலும் சிலர்  ஆடும் அணியில் இருந்து நீக்கப்படலாம்.  சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், கேதர் ஜாதவ், முகம்மது சிராஜ் ஆகியோரில் 2பேருக்கு அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:இந்தியா: ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், ரிஷப் பன்ட்,  எம்எஸ்.டோனி(விக்கெட் கீப்பர்), விஜய்சங்கர்,  க்ருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, யஜ்வேந்திர சாஹல், சித்தார்த் கவுல், முகம்மது சிராஜ், கேதர் ஜாதவ்.நியூசிலாந்து: கேன் வில்லியம்சன்(கேப்டன்), டிம் செய்பெர்ட்(விக்கெட் கீப்பர்),  கோலின் மன்றோ, டாரில் மிட்செல், ராஸ் டெய்லர்,  கோலின் டீ கிராண்ட்ஹோம்,  மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குலலெஜின், டிம் சவுத்தீ, ஈஷ் சோதி, லோக்கி பெர்கூசன், ஜேம்ஸ் நீஷேம், டோக் பிரேஸ்வெல்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Newcastle ,India , Newcastle,win, 2nd T20 cricket ,tonight,India
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!