×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் விதர்பா அணி மீண்டும் சாம்பியன்: 78 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா தோல்வி

நாக்பூர்: நாட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில்  சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியனாகி கோப்பையை தக்க வைத்து உள்ளது. ரஞ்சி கோப்பை 85ம் ஆண்டுக்கான போட்டித் தொடர் நவம்பர் ஒண்ணாம் தேதி தொடங்கியது. மொத்தம் 37 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதிப் ோபட்டியில் விதர்பா அணி ஒரு இன்னிங்ஸ், 11 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி 2வது முறையாக  இறுதிப் போட்டிக்கு  தகுதிப் பெற்றது. அதேபோல் 2வது அரையிறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகவை வீழ்த்தி 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இறுதிப் ேபாட்டி விதர்பா - சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையே பிப்.3ம் தேதி நாக்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற விதர்பா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அக்‌ஷய் கர்னேவர் அதிகபட்சமாக ஆட்டமிழக்கமல் 73 ரன்கள் எடுத்தார். சவுராஷ்டிரா தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. ஸ்நெல் படேல் அதிகபட்சமாக 102 ரன்கள் குவித்தார். விதர்பா அணியின் ஆதித்ய சர்வதே 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

விதர்பா அணி  2வது இன்னிங்சில் 200 ரன்களுக்கு அவுட்டானது. ஆதித்ய சர்வதே அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். சவுராஷ்டிரா அணியின் தர்மேந்திரசிங் ஜடேஜா 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். போட்டியின் 4ம் நாளில்  விதர்பா அணி 205 ரன்கள் முன்னிலை வகிக்க சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.முதல் இன்னிங்சில் சதமடித்த ஸ்நெல் 12 ரன்களில் வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். நட்சத்திர ஆட்டக்காரர் செதேஷ்வர் புஜாரா  டக்அவுட்டானார். சவுராஷ்டிரா 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 28 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழந்து 58 ரன்கள் எடுத்தது.இந்நிலையில் கடைசிநாளான  நேற்று  விஷ்வராஜ் ஜடேஜா 23 ரன்களுடனும், கமலேஷ் மக்வானா 2 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.  இருவரும் பொறுப்புடன் விளையாடினர். அதனால் முதல் 15 ஓவர்களுக்கு இருவரையும் பிரிக்க முடியாமல் விதர்பா பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் தடுமாறினர்.

ஆனால் அணி கூடுதலாக 30 ரன்கள் சேர்த்திருந்த போது கமலேஷ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களும்  சர்வதே,  வாக்ரே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெளியேறினர். ஆனால் விஷ்வராஜ் ஒருப்பக்கம் நிலைத்து விளையாடி அரை சதம் அடித்தார். அவரும் சர்வதே பந்து வீச்சில்  எல்பிடபிள்யூ ஆகி 52 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தா். அப்போது அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள். சவுராஷ்டிராவின் தோல்வி உறுதியானது. அதற்கேற்ப எஞ்சிய 2 விக்கெட்களும் 127 ரன்களுக்கு பறிப்போனது. அதனால் விதர்பா 78 ரன்கள் வித்தியாசத்தில்  சவுராஷ்டிராவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் ஆகி கோப்பையை தக்க வைத்தது.விதர்பா அணி வெற்றிப் பெற காரணமான சர்வதே 2வது இன்னிங்சில் வீழ்த்திய 6 விக்ெகட் உட்பட இந்தப் போட்டியில்  11 விக்கெட்களை வீழ்த்தினார். அக்‌ஷய் வாக்ரே மொத்தம் 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saurashtra , Ranji, Trophy Vidarbha ,Trophy,: Saurashtra defeated by 78 runs
× RELATED பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்