×

சேத்தியாத்தோப்பு அருகே இடவசதியில்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரைமேடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 8ம் வகுப்பு வரை சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கரைமேடு கிராமப்பகுதியில் விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரையான நான்கு வழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.இந்நிலையில் கரைமேடு அரசு நடுநிலைப்பள்ளி இடமும் சாலை பணிக்கு தேவைப்படுவதால் பள்ளியின் முதல் பாதி பகுதியை இடிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதனால் ஒரு சில வகுப்பு பள்ளி மாணவர்களை அருகிலுள்ள கிராமசபை கட்டிட கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்கு அவர்கள் வராண்டாவில் அமர்ந்து படித்து வருகின்றனர். மேலும், கிராமத்தின் முகப்பில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் அமர்ந்து படிக்கின்றனர்.இவ்வாறான சூழலில் ஆசிரியர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும், பள்ளி கட்டிட வசதி இல்லாமல் இடப்பற்றாக்குறையால் ஒரே இடத்தில் மாணவர்கள் இல்லாததால் அவர்களது படிப்பும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு கரைமேடு அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளிக்கட்டிடம் கட்டி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government school students ,Sethiyatope , Sethiyatope, government school, students
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு