×

ஒதியத்தூர் கருப்பணார் கோயிலில் எச்சில் இலைகள் மீது பக்தர்கள் உருளுதண்டம்

ஆத்தூர்:  ஓதியத்தூர் கிராமத்தில் உள்ள கருப்பணார் கோயிலில், எச்சில் இலைகள் மீது உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய விநோத வழிபாடு நடந்தது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர்கேட் பகுதி மலையடிவாரத்தில், கருப்பணார் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் விருபாட்சீஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் ருத்ராபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பூஜை முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர், அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது, பக்தர்கள் சிலர் உருளுதண்டம் போட்டனர். அதை தொடர்ந்து, அந்த இலைகளை தலை மீது சுமந்து சென்று, நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி, ஒதியத்தூர், ஆத்தூர், மஞ்சினி, கல்லாநத்தம், பெங்களூரு, நாமக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களிலிருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் முத்துசாமி, அறங்காவலர்கள் சேதுராமன், ராதாகிருஷ்ணன், ஹரிஹரன், ஸ்ரீதர், ஒதியத்தூர் பிராமணர் சங்க தலைவர் சீனிவாசன், துணை தலைவர் சுந்தரராமன், செயலாளர் பாஸ்கரன், துணை செயலாளர் திருமலைபிச்சன், பொருளாளர் முத்துராமன், ராசிகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees , Odayathur, kebabanar temple, devotees
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி