×

மத மாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தகராறு பாமக பிரமுகர் வெட்டிக்கொலை

திருவிடைமருதூர்:  மத மாற்றம் செய்ய வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் பாமக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தஞ்சை  மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பேட்டையை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் (45).   கேட்டரிங் கான்ட்ராக்டரான ராமலிங்கம், வேலைக்கு ஆட்களை அழைப்பதற்காக  பாக்கினாம்தோப்பு பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது, அங்கு  ஒரு தரப்பினர் ராமலிங்கத்தை தடுத்து நிறுத்தி மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு,  வேலைக்கு ஆட்களை அழைத்து கொண்டு ராமலிங்கம் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வேலை முடிந்து வந்த மூத்த மகன்  ஷாம்சுந்தரை (17) அழைத்து கொண்டு லோடு ஆட்டோவில் ராமலிங்கம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருபுவனம் முஸ்லிம் ெதரு வழியாக வந்தபோது அங்கு  ஆயுதங்களுடன் நின்ற 4 பேர் கும்பல், ராமலிங்கத்தை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.


மகன் ஷாம்சுந்தரையும் அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது, ராமலிங்கம் தடுத்தபோது அவரது  மற்றொரு கையிலும் வெட்டு விழுந்தது. அதன்பின் மர்மநபர்கள் தப்பி சென்றனர். படுகாயமடைந்த ராமலிங்கம் கும்பகோணம்  அரசு மருத்துவமனையில் இறந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மண்டல ஐஜி வரதராஜூ தலைமையில் தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், தஞ்சை எஸ்பி மகேஸ்வரன், அரியலூர் எஸ்பி சீனிவாசன் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ராமதாஸ் கண்டனம்
இந்த கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மத  மாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை  மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய  செயல்கள் மனித குலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தை குலைத்து மத  மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை  அனுமதிக்கக்  கூடாது. கொல்லப்பட்ட  

ராமலிங்கம் குடும்பத்தினருக்கு பாமக சார்பில் எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  ராமலிங்கம் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்துக்  குற்றவாளிகளையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசும், மத்திய  அரசும் இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mouthpiece , PMK leader, intersecting
× RELATED பாஜவோடு சேர்ந்து பாமக கூட்டணி கச்சேரி...