சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இவர், இத்தொகுதியில் அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பான, சமூகச் சிந்தனையுடன் செயல்களைச் செய்திருக்கிறார். அவர் இன்று தொகுதிக்கு உட்பட்ட தெருக்களில் 5 மணி நேரம் நடந்தே சென்று வீடு வீடாக வாக்குச்சேகரித்தார். அப்போது திமுகவிற்கே எங்கள் வாக்கு, நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று பல்வேறு தரப்பினர் உறுதியளித்தனர். இந்த வாக்குச்சேகரிப்பில் திமுக பகுதிச் செயலாளர்கள் இரா.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அவைத் தலைவர் எஸ்.குணசேகரன், சைதை சம்பத், ஐ.கென்னடி, நேருநகர் எஸ்.பாட்சா, எஸ்.ஆர்.செந்தில், விசிக ஜேக்கப், ம.தி.மு.க. சுப்பிரமணி உள்ளிட்ட தோழமைக்கட்சிகள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்….
The post மா.சுப்பிரமணியனுக்கு பல்வேறு தரப்பினர் பேராதரவு: திமுகவிற்கு தான் எங்கள் வாக்கு என மக்கள் வாக்குறுதி appeared first on Dinakaran.
