×

மேட்டூர் அருகே சம்பா மிளகாய் விற்பனை தொடக்கம்... கொளத்தூர் சம்பா மிளகாய்க்கு நல்ல வரவேற்பு

கொளத்தூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சம்பா மிளகாய் வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளது. கொளத்தூரில் விளையும் சம்பா மிளகாய் நல்ல காரம், நிறம், மனம், கொண்டதால் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  வழக்கமாக ஜனவரி முதல் வாரத்திலேயே விற்பனைக்கு வந்துவிடும். அதன்படி இந்த ஆண்டும் சீசன் தொடங்கியுள்ளது. ஈரோடு, கோவை, விருதுநகர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சம்பா மிளகாயை வாங்க வரத்தொடங்கியுள்ளனர்.

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் சம்பா மிளகாய் விவசாயமே பிரதானம். கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தபாடி, செட்டிபட்டி, காரைகாடு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2400 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இரண்டு வாரத்துக்கு முன் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சம்பா மிளகாய் தற்போது 125 ரூபாய்க்கு விலை போகிறது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samba Chilika Mullaiai ,Mettur , Mettur, Samba chilli, sold
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்