×

சின்னதம்பி யானை மீண்டும் வனப்பகுதியில் வசிக்க வாய்ப்பு இல்லை : யானை நிபுணர் தகவல்

கோவை : கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் கடந்த 25ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். அங்கு சில நாட்கள் சுற்றி திரிந்த சின்னதம்பி யானை ஜன., 1ம் தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை பகுதிக்கு வந்தது. சுமார் 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த சின்னதம்பி யானை பசியால் மயங்கி விழுந்தது. இதையடுத்து தகவலறிந்த வனத்துறையினர் யானைக்கு தேவையான உணவுகளை வழங்கினர். உணவை சாப்பிட்ட சின்னதம்பி யானை அங்கிருந்த புதர் பகுதியியே தங்கிவிட்டது.

கும்கியியுடன் விளையாட்டு

தொடர்ந்து 6வது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யானையை விரட்டுவதற்காக கலீம் என்ற கும்கி யானை கொண்டுவரப்பட்ட நிலையில், சின்னதம்பி யானை அதனுடன் நண்பனாகி உற்சாகத்துடன் விளையாடியும், கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டியும் மகிழ்ந்து வருகின்றது. இதையடுத்து மற்றொரு கும்கி யானை வரவழைக்கப்பட்டது. மேலும் கும்கிகள் கரும்புடன் காப்புக்காட்டுக்கு நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறினர். ஆனால் தேவையான உணவு மற்றும் தங்குவதற்வதற்கான இடம் இருப்பதால்தான் சின்னதம்பி யானை வனப்பகுதிக்கு செல்ல மறுக்கிறது என வனத்துறையினர் தகவல் அளித்தனர்.

பொதுமக்கள் ஆதரவு

எனவே நேற்று யானை படுத்து ஓய்வு எடுக்கும் புதர்களை வனத்துறையினர் வெட்டி அகற்றினர். ஆனால் புதர்களை வெட்டி அகற்றியபோதும் யானை வேறு இடத்துக்கு செல்லாமல் அங்கேயே இருந்தது. அங்குள்ள சர்க்கரை ஆலை பகுதியிலேயே முகாமிட்டுள்ளது. ஆலைக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கரும்புகளை சாப்பிட்டுவிட்டு அப்பகுதியிலேயே சுற்றி வருகிறது. சின்னதம்பியை பார்க்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதிக்கு தினமும் குவிந்து வருகிறார்கள். மேலும் சின்னதம்பிக்கு ஆதரவாக பேனர்கள், போஸ்டர்களும் அடித்துள்ளனர். அதில் சின்னதம்பியை வாழவிடுங்கள், சேவ் சின்னதம்பி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கியுள்ளது. இதனிடையே சின்னதம்பியை கும்கியாக மாற்ற முடிவு செய்யப்பட்டதற்கு பொதுமக்களும், வன உயிரின ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் சின்னதம்பியை கும்பியாக மாற்றும் எண்ணம் இல்லை என அரசு மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

யானை நல நிபுணர் ஆய்வு

இதனை தொடர்ந்து பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி உள்ளிட்ட வன அதிகாரிகள் 80க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக சின்னதம்பியை கண்காணித்து வரும் நிலையில், தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீவத்சவா உத்தரவுபடி யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் இன்று யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், மீண்டும் சின்னதம்பி யானை வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். சின்னதம்பிக்கு தேவையான உணவும், தண்ணீரும் இந்த பகுதியில் கிடைப்பதால் வெளியேற மறுக்கிறது என்றும், மேலும் கும்கிகளுடன் நன்றாக பழகி வருவதாலும், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்துலை ஏற்படுத்தாமலும் உள்ளதால் சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விட்டாலும் அது மீண்டும் சமவெளிக்கு பகுதிக்கு வரும் வாய்ப்பே அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnatambi ,forest , Chinnathambi Elephant, Forest, Elephant Expert Information, Forest Department
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு