×

மதகுருமார்கள், பிஷப்புகளால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்குள்ளாவது உண்மையே : போப் பிரான்சிஸ் ஒப்புதல்

கத்தார்: மதகுருமார்கள், பிஷப்புகளால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்குள்ளாவது உண்மை தான் என கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார். உலக வரலாற்றில் முதல் முறையாக அரபு நாட்டுக்கு சென்ற போப் பிரான்சிஸ், அபுதாபியில் நேற்று நிறைவேற்றிய சிறப்பு திருப்பலியில் 1.70 லட்சம் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுவிட்டு விமானத்தில் கத்தார் செல்லும் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு போப் பிரான்சிஸ் பதிலளித்தார். அப்போது செய்தியாளர்கள் வாட்டிகனில் இருந்து வெளியாகும் பெண்கள் பத்திரிக்கை ஒன்றில், கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது பற்றியும், மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகளுக்கு எதிராக கன்னியாஸ்திகள் பாலியல் புகார்கள் அளித்து வருவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்த அவர் மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகள் சிலர், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என்றார்.  இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்துப் பகுதியிலும் உள்ளதாக குறிப்பிட்ட போப் பிரான்சிஸ், இந்த கொடுமைகள் தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது என நினைக்கிறேன் என்றார். இதனை தடுக்கும் பணிகளில் தாம் தொடர்ந்து ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். பாலியல் புகார் தொடர்பாக சில மதகுருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கன்னியாஸ்திரிகளுக்கு நிகழும் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்காக வாட்டிகன் நீண்ட காலமாக போராடி வருவதாகவும் கூறினார். இது போன்ற கொடுமைகளை முற்றிலும் தடுக்க இன்னும் அதிகமாக தொடர்ந்து போராடுவோம் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bishops ,priests ,Pope Francis , Clergy, bishop, nuns, sexual abuse, Catholic chaplain Pope Francis
× RELATED போப் உடல்நிலை பாதிப்பு