×

மம்தாவுடன் தர்ணாவில் ஈடுபட்ட போலீஸ் கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: மம்தா பானர்ஜியுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கொல்கத்தா போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையை துவக்க மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிட்பண்ட் ஊழல் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை, கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீஸ் கமிஷனரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தின் போது மம்தாவுடன் இணைந்து போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் உள்ளிட்ட சில அதிகாரிகளும் தர்ணா செய்தனர். இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் மம்தாவுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையை துவக்க வேண்டும் என மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police commissioner ,Darnah ,Mamata ,Union Home Ministry , Mamata Banerjee, Kolkata Police Commissioner
× RELATED ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு