×

மெரினா கடற்கரை உள்ளிட்ட 5 இடங்களில் சிசிடிவி கேமரா வசதியுடன் ஸ்மார்ட் பார்க்கிங்: நடைபாதையில் வாகனங்களை நிறுத்தினால் 4 மடங்கு அபராதம்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த பல்வேறு அதிநவீன வசதிகள் அடங்கிய ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்முடிவில் 471 சாலைகளில் 12,047 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்டமாக இந்த திட்டமானது அண்ணா நகர், புரசைவாக்கம், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில்  அமல்படுத்தபடவுள்ளது.  அதன்படி அண்ணாநகரில் 1673, புரசைவாக்கத்தில் 293, மெரினாவில் 1673, பெசன்ட் நகரில் 944 வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மெரினா கடற்கரையில் டிஜிபி அலுவலகத்திற்கு முன்பு 1.5 லட்சம் செலவில் 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சுழலும் கேமராக்கள் 1000 மீட்டர் தொலைவு வரையில் கண்காணிக்கும்.  இதைத் தவிர்த்து இது தொடர்பான செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விளக்க பலகையும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பார்க்கிங்கில் வாகனம் நிறுத்த விரும்புவர்கள் செயலி பதிவிறக்கம் செய்து பெயர், இடம், வாகனத்தின் வகை உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். இதன்பிறகு இருக்கும் இடத்தில் அருகில் எந்த இடத்தில் எவ்வளவு வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன என்ற தகவல் கிடைக்கும். இதன்பிறகு அந்த இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் செல்லாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை செலுத்தலாம்.

 இருசக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 5ம், நான்கு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 20ம் செலுத்த வேண்டும். இதை ஆன்மூலம் மூலம்தான்  செலுத்த முடியும்.  பார்க்கிங் இடத்தை விட்டு விட்டு நடைபாதை மற்றும் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் 4 மடங்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்திற்கு 20ம், நான்கு சக்கர வாகனத்திற்கு ₹80ம் அபராதமாக வசூலிக்கப்படும். இதை கண்காணிக்க தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : places ,CCTV ,Marina Beach , Marina Beach, Vehicles
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...