×

ரஞ்சி கோப்பை பைனல் முன்னிலை பெற்றது விதர்பா: சவுராஷ்டிரா 307 ரன் ஆல் அவுட்

நாக்பூர்: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 5 ரன் முன்னிலை பெற்றது. நாக்பூரில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கர்னிவார் ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாசினார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்திருந்தது. நட்சத்திர வீரர் செதேஷ்வர்  புஜாரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்னெல் பட்டேல் 87 ரன், மன்கட் 16 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சதத்தை நிறைவு செய்த ஸ்னெல் பட்டேல் 102 ரன் எடுத்த நிலையில் (209 பந்து, 15 பவுண்டரி), உமேஷ் யாதவ் வேகத்தில் விக்கெட் கீப்பர் வாத்கர் வசம் பிடிபட்டார். மன்கட் 21, மக்வானா 27, தர்மேந்திரசிங் ஜடேஜா 23 ரன்னில் வெளியேறினர்.

கடைசி விக்கெட்டுக்கு கேப்டன் ஜெய்தேவ் உனத்காட் - சேத்தன் சகாரியா ஜோடி கடுமையாகப் போராடி 60 ரன் சேர்த்தது. உனத்காட் 46 ரன் எடுத்து (101 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்க, சவுராஷ்டிரா அணி 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (117 ஓவர்). சகாரியா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா பந்துவீச்சில் ஆதித்யா சர்வதே 5, அக்‌ஷய் வாக்கரே 4, உமேஷ் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 5 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் கேப்டன் பைஸ் பஸல் 10, சஞ்சய் ரகுநாத் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கணேஷ் சதீஷ் 24, வாசிம் ஜாபர் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தர்மேந்திரசிங் ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார். இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranji Trophy ,final ,Virender Sehwagra , Ranji Cup Final, Vidhara, Saurasthra
× RELATED இந்தோனேசியா ஓபன் கால் இறுதியில் லக்‌ஷயா