×

ரிச்சர்ட்ஸ், இம்ரானை நினைவூட்டுகிறார் கோஹ்லி... ரவி சாஸ்திரி பாராட்டு

வெலிங்டன்: இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியின் ஆட்டத்தை பார்க்கும்போது, முன்னாள் நட்சத்திர வீரர்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இருந்து விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோஹ்லி குறித்து பயிற்சியாளர் சாஸ்திரி நேற்று கூறியதாவது:கோஹ்லியின் ஆட்டத்திறன் மற்றும் போராட்ட குணத்தை பார்க்கும்போது வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் போன்ற மகத்தான வீரர்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. இப்படி ஒரு வீரர் கேப்டனாக கிடைத்திருப்பது இந்திய அணி அதிர்ஷ்டம் என்று தான் கூறுவேன்.

களத்தில் ஆதிக்கம் செலுத்தும் விதம், மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவது, தனக்கென மிக உயர்ந்த தரத்தை நிர்ணயித்துக்கொளவது, உடல்தகுதியை பராமரிப்பதற்காக கடுமையாக உழைப்பது, பயிற்சியில் தீவிரம், தனிமனித ஒழுக்கம், அணியின் நலனுக்காக எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருப்பது... என்று கோஹ்லியின் சிறப்பம்சங்கள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அவரது அர்ப்பணிப்பும் பங்களிப்பும் நம்பமுடியாத வகையில் அமைந்துள்ளது. கேப்டனாகவும் அவர் வேகமாக முன்னேறி வருகிறார். நுணுக்கங்களை விரைவாக கற்றுக்கொள்கிறார். எதிர்காலத்தில் மிகச் சிறந்த கேப்டனாகவும் முத்திரை பதிப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுல் இல்லை. இவ்வாறு சாஸ்திரி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Richards ,Imran ,Kohli ,Ravi Shastri , Richards, Imran, Kohli, Ravi Shastri
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு