×

வன அலுவலகத்தில் 35 ராஜநாக குட்டிகள்: அதிகாரிகள் காட்டுக்குள் விட்டனர்

திருவனந்தபுரம்: வன அலுவலகத்தில் பொரித்த 35 ராஜநாக குட்டிகளை அதிகாரிகள் காட்டுக்குள் பாதுகாப்பாக விட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாரம்புழ உதவி வன பாதுகாவலர் அலுவலகத்தில், சிறப்பு விசாரணை மற்றும் பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவு ஆபத்தான மற்றும் காயமடைந்த வனவிலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் காட்டில் விடும் சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி, மரியப்பள்ளியில் உள்ள ஒரு வீட்டில், ராஜநாகம் முட்டைகளுடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக வன அலுவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ராஜநாகத்துடன் 35 முட்டைகளும் இருந்தன. இதையடுத்து அந்த ராஜநாகத்தை பிடித்து காட்டில் பாதுகாப்பாக விட்டனர். மேலும் முட்டைகள் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு சிறப்பு கொட்டகையில் வைக்கப்பட்டு, குஞ்சு பொரிப்பதற்கான சரியான வெப்பநிலை கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி ஒரு ராஜநாக குட்டி முட்டையில் இருந்து வெளியே வந்தது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் மீதமுள்ள முட்டைகளும் பொரித்தன. குட்டி ராஜநாகங்கள் படமெடுத்து ஆடி தங்கள் வீரியத்ைத காண்பித்தன. இந்த நிலையில் நேற்று மாலை, அந்த பாம்பு குட்டிகள் எருமேலி அருகே காட்டில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன….

The post வன அலுவலகத்தில் 35 ராஜநாக குட்டிகள்: அதிகாரிகள் காட்டுக்குள் விட்டனர் appeared first on Dinakaran.

Tags : Rajanaga cubs ,Thiruvananthapuram ,Kottayam, Kerala State ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...