×

பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் துணைநடிகர், மெக்கானிக்குக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பைக்கை போட்டுவிட்டு ஓடிய 3 பேருக்கு வலை

சென்னை: பூந்தமல்லி அருகே இரு சக்கர வாகன மெக்கானிக் மற்றும் துணை நடிகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் தேடி  வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பாவேந்தர் நகரை சேர்ந்தவர் பெருமாள் (25), காட்டுப்பாக்கம், மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் உள்ள  கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையில் மோட்டார் சைக்கிளை பழுது பார்த்துக்கொண்டு இருந்தார்.  அப்போது, அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பெருமாள் அருகே நின்று முகவரி கேட்டுள்ளனர். இதுகுறித்து பெருமாள் சொல்லிக்கொண்டு இருந்த  நிலையில் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெருமாளை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட பல இடங்களில்  அரிவாள் வெட்டு விழுந்தது.

 ரத்தம் சொட்ட, சொட்ட அலறிய பெருமாள்,  நிலை குலைந்து அப்படியே கீழே சரிந்தார். அப்போது அங்கு பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்த சண்முகம் (47)  என்பவர் நின்று கொண்டிருந்தார். இவர் பிரண்ட்ஸ் ஆப் போலீசாகவும்,  துணை நடிகராகவும் உள்ளார். இவர், ஓடி வந்து தடுக்க முயன்றபோது அவரையும்  வெட்டி விட்டு அந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து பொதுமக்கள் வெட்டுக்காயங்களுடன் கிடந்த  பெருமாளை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துணை நடிகர் சண்முகம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mechanic ,Poonamallee , Poonamalli, veteran, mechanic, sickle cut, bike, web
× RELATED திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை