×

அபுதாபியில் போப் சிறப்பு பிரார்த்தனை: 1.70 லட்சம் கத்தோலிக்கர்கள் வழிபாடு

அபுதாபி: உலக வரலாற்றில் முதல் முறையாக அரபு நாட்டுக்கு சென்ற போப் பிரான்சிஸ், அபுதாபியில் நேற்று நிறைவேற்றிய சிறப்பு திருப்பலியில் 1.70 லட்சம் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.ஐக்கிய அரபு நாடுகளில், 2019ம் ஆண்டு ‘சகிப்புத்தன்மை’ ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரபு நாட்டில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் பிரான்சிஸ்க்கு அபுதாபி இளவரசர் ஷேக்  முகமது பின் சயத் அல் நயான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போப் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அபுதாபி வந்தார். நேற்று முன்தினம் போப் பிரான்சிஸ் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து  பேசினார்.

நேற்று நடைபெற்ற மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவரை வரவேற்க அரபு நாடுகளில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான கததோலிக்க கிறிஸ்தவர்கள் வாடிகன் நகர கொடி, பேனர்களுடன் வரவேற்றனர். அரபு நாட்டின் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நயான்  பின் முபாரக் அவரை சயேத் விளையாட்டு உள்அரங்கில் வரவேற்றார். அதனை தொடர்ந்து அங்கு போப் சிறப்பு பிரார்த்தனை (திருப்பலி) நிறைவேற்றினார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மதகுருக்களும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் பங்கேற்று வழிபட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pope ,Abu Dhabi ,Catholics , Special prayer ,Pope,Abu Dhab, 1.70 lakh Catholics worship
× RELATED கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் கடத்திய நபர் கைது