சமவேலைக்கு சமஊதியம் கோரி ரேஷன்கடை தொழிற் சங்க கூட்டமைப்பு நாளை முதல் போராட்டம்

சென்னை : சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை நியாயவிலைக் கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை பணியாளர் சங்கம் சார்பில் வரும் 13-ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவருக்கும் சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியருக்குஇணையான ஊதிரம்தர வேண்டும்.  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  வலியுறுத்தி வரும் நாளை முதல் நியாய விலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>