×

வெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: போப் பிரான்சிஸ் தலையிட்டு உதவுமாறு மதுரோ கடிதம்

வெனிசுலா: வெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பிரான்சிசுக்கு கடிதம் எழுதியுள்ளார். வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி வகிக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் கையிடோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையிடோவை அதிபராக அங்கீகரித்துள்ளதால் வெனிசுலாவில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு கிடைக்க போப் பிரான்சிஸ் இதில் தலையிட்டு உதவிட வேண்டும் என்று தான் கடித்த எழுதியிருப்பதாக நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வரும் 7ம் தேதி மெக்ஸிகோ தலையீட்டின் பேரில்  வெனிசுலா விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே லத்தீன், அமெரிக்க நாடுகள் வெனிசுலா அதிபராக ஜுவான் கையிடோவை அங்கீகரித்துள்ளதால் நிக்கோலஸ் மதுரோவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வெனிசுலா விவகாரத்தில், அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, பொலிவியா, கியூபா, நிகாரகுவா, ஈரான், சிரியா, துருக்கி ஆகிய நாடுகள் ஆதரவளிக்கின்றன. அதேவேளையில் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கையிடோவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இஸ்ரேல், பிரிட்டன், ஜெர்மனி, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட லத்தின் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. மெக்ஸிகோ இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maduro ,Venezuela ,Pope Francis , Venezuela, President Madura, Pope Francis, letter
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு