×

புனேவில் பயிற்சி விமானம் விபத்து... விமானி காயம்

புனே : மகாராஷ்டிர மாநிலம் புனேவை அடுத்துள்ள இந்தாபூர் பகுதியில் கேர்வர் விமான பயிற்சி நிறுவனத்தின் விமானம் விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் பயிற்சி விமானி படுகாயமடைந்தார். புனேவில் கேர்வெர் ஏவியேசன் என்ற விமான பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கமெர்சியல் பைலட்டாக ஆசைப்படும் ஏராளமானோர் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் பயிற்சிவிமானி ஒருவர் விமானத்தை இன்று இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் அவசர அவசரமாக தரையிறக்கும் போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. மேலும் விமானியின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விமானியை மீட்டு பாராமதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : plane crash ,Pune , Trainer aircraft crashes ,Pune, pilot,rushed to hospital
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...