×

இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை: பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் தீர்மானம்

பார்சிலோனா: இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் இலங்கையின் தமிழின அழிப்புக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகளை தருவதற்கு இலங்கை அரசு மறுக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் மற்றும் போர் கைதிகளை இலங்கை அரசு தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் இதில் அடங்கும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சிறப்பு தூதுவரை ஐ.நா. சபை நியமிக்க வேண்டும் என்றும் பார்சிலோனா மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil ,Sri Lankan ,Barcelona Municipal Council , International inquiry,Tamil people,massacre,Sri Lankan government,Resolution,Barcelona,Municipal Council
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை