×

தமிழகம் முழுவதும் கால்டாக்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்: உயிரிழந்த ஓட்டுனருக்கு நியாயம் கேட்டு போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் கால்டாக்சி ஓட்டுனர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து கால்டாக்சி ஓட்டுனர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் திட்டியதால் மனமுடைந்து உயிரிழந்த ஓட்டுனர்களுக்கு நீதிவேண்டும் என்பது வேலைநிறுத்த போராட்டத்தின் நோக்கம் ஆகும். ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சட்டத்தை உருவாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கால்டாக்சி ஓட்டுனர்கள், சுற்றுலா டாக்சி ஓட்டுனர்கள், ஐடி நிறுவனங்களில் இயங்கக்கூடிய வாகனங்களின் ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் கால்டாக்சிகள் அங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 5 லட்சம் ஓட்டுனர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கோவையிலும் கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 5,000 கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கால்டாக்சிகளை மட்டுமே நம்பியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Caldaxi drivers ,Tamil Nadu: Struggle ,death , Call taxi,drivers,strike,Tamil Nadu,Struggle,
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்