×

திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக்கடன், மகளிர் குழு கடன் ரத்து: திருப்பரங்குன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று  திருப்பரங்குன்றம் அருகே நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடிகளின் திமுக முகவர்கள் கூட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் நேற்று காலை நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுடன் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் வரக்கூடும். திமுக ஊராட்சிக்கு கூடும் கூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்சிக்கு எதிராக மக்கள் முடிவு எடுத்துவிட்டதை உணர்ந்து அதிமுக உள்ளிட்ட சில கட்சியினர் பொறாமை, ஆத்திரம் அடைகின்றனர்.  தமிழகத்தில் உள்ள அடிமை ஆட்சியையும், இதை பினாமியாக நடத்தும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும் அகற்ற விரைவில் வரும் தேர்தலில் முடிவு ஏற்படும். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். 2016 தேர்தலில் ஒரு சதவீத வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

 ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணை கோரிய, ஓ.பன்னீர்செல்வம். இன்றைக்கு துணை முதல்வரானதும் கப்சிப் ஆகி விட்டார். ஆனால் சட்ட அமைச்சர் சண்முகமும், அதிமுகவினரும் மர்ம மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர தனி விசாரணை தேவை என்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து தனி விசாரணை நடத்தி, யார், யார் காரணமோ அவர்கள் ஜெயிலுக்கு போகும் நிலை நிச்சயம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். ஊராட்சி சபை கூட்டம்: திமுக சார்பில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தனக்கன்குளம் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பிரதமர் மோடியும் முதல்வர் எடப்பாடியும் பொய் சொல்லி ஆட்சி நடத்துகிறார்கள். விவசாயிகளின் கோவணத்தை அவிழ்த்து, ஓட விட்டவர்கள், விவசாயிகளுக்கு இரு மடங்கு வருமானத்தை ஏற்படுத்தப் போகிறார்களாம். தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் ₹7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தார். கொல்கத்தா கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தேவையற்றது, அது விவசாயிகளுக்கு அவமானம்’ என்று கூறினார், அதே கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பழி வாங்க ஏகப்பட்ட அக்கிரமங்களை மோடி செய்கிறார். மோடியை எதிர்த்து கொல்கத்தாவில் மம்தா கூட்டிய மாநாட்டில் நான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றோம்.

வங்கியில் கடன் வாங்கி, கோடி கோடியாக கொள்ளை அடித்த பெரிய பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறார். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் உதவித் தொகை தரப்படும் என அறிவித்துள்ளார். உரத்திற்கு 5 சதவீத வரி, பூச்சி மருந்திற்கு 10 சதவீத வரி என ஜிஎஸ்டியை போட்டு வசூல்செய்துவிட்டு, உதவித் தொகை என பம்மாத்து வேலை காட்டுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. திமுகவின் தயவில்லாமல் யாரும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது.  இவ்வாறு அவர் பேசினார். சாத்தூர்: விருதுநகர்  மாவட்டம், சாத்தூர் அருகே, சத்திரப்பட்டி ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பொதுப்பணித்துறை, காவல்துறை, கல்வித்துறை, இந்து  அறநிலையத்துறை ஆகிய துறைகளில் கொள்ளையடித்துத்தான் இந்த ஆட்சி நடக்கிறது. நான்கரை ஆண்டுகளாக எதுவும் அறிவிக்காத பாஜ அரசு தற்போது, விவசாயிகளுக்கு ₹6 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளை காப்பாற்றாது. 10 ஆயிரம்  முதல் அதிகபட்சமாக ஒரு லட்சம் வரைதான் விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். அதை  தள்ளுபடி செய்யாமல், ₹10 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ள பெரும் முதலாளிகளை  கடனை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு பேசினார்.பின்னர் பெண்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், ‘‘ 8 லட்சம்  தொழிலாளர்களின் வாழ்வாதாரமான பட்டாசு தொழில் பிரச்னைக்கு திமுக  முற்றுப்புள்ளி வைக்கும்’’ என்றா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,committee ,women ,speech ,Tiruparkundham ,MK Stalin , DMK regime, education loan, women's group cancels credit, Tiruparankundam, MK Stalin
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...