×

பிரக்சிட்டுக்கு பிறகு கலகம் ஏற்பட்டால் ராணி குடும்பத்தை ரகசியமாக வெளியேற்ற போலீஸ் திட்டம்

லண்டன்: ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அடுத்த மாதம் வெளியேறியபின், லண்டனில் கலகம் ஏற்பட்டால் ராணி குடும்பத்தினரை ரகசிய இடத்துக்கு கொண்டு  செல்வதற்கு இங்கிலாந்து தயாராகி வருகிறது.ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அடுத்த மாதம் 29ம் தேதி வெளியேறுகிறது. இதற்காக சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறை தளர்வை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.  ஆனால் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் இங்கிலாந்து வெளியேற வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கூறிவிட்டது. இதனால் இங்கிலாந்தின் ஒரு பகுதியாக உள்ள தெற்கு அயர்லாந்து மக்கள்,  வடக்கு அயர்லாந்துக்கு செல்வது, வர்த்தகம் செய்வது உட்பட பல விஷயங்களில் பிரச்னைகளை இங்கிலாந்து சந்திக்க வேண்டியுள்ளது. எந்த பிரச்னையும் இல்லாத வகையில் சுமூக  உடன்பாட்டுடன் பிரக்சிட் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து எம்.பி.க்கள் பலர் கூறுகின்றனர்.  

எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால், லண்டனில் கலகம் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. அதுபோன்ற  சூழ்நிலை ஏற்பட்டால் ராணி இரண்டாம் எலிசபெத் குடும்பத்தினரை லண்டனைவிட்டு வேறு இடத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் ரகசிய திட்டம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகள்  ஆலோசித்து வருகின்றனர். இந்த அவசரகால நடைமுறை பனிப்போர் காலத்திலிருந்து உள்ளதாக இங்கிலாந்து அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு  போலீசாருடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ராணி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளித்து வந்த முன்னாள் போலீஸ் தலைவர் டாய் டேவிஸ் கூறுகையில், ‘‘லண்டனில் பிரச்னை  ஏற்பட்டால், ராணி குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எப்படி வெளியேற்றுவது என்பது ரகசியமானது. அதுகுறித்து தகவலை தெரிவிக்க முடியாது’’  என்றார். இங்கிலாந்து மீது சோவியன் யூனியன் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அபாயம் இருந்த காலத்தில், பிரிட்டானியா என்ற கப்பல் மூலம் ராணியை கடலுக்குள் கொண்டு செல்லும் திட்டம் இருந்தது.  இதற்கு ‘ஆபரேஷன் கேன்டிட்’ என பெயர் வைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : riot ,Queen ,event , police plan,secretly evacuate, Queen's family,event of a riot after Prakrit
× RELATED தகிக்கும் மலைகளின் அரசி:...