ரூ.9,000 கோடி மோசடி செய்து லண்டன் தப்பிய மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி: மேல்முறையீட்டுக்கு 2 வாரம் அவகாசம்

புதுடெல்லி: வங்கிகளில் ₹9,000 கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துவிட்டு லண்டனில் பதுங்கியுள்ள கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, இங்கிலாந்து  உள்துறை அமைச்சர் அனுமதி அளித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
 கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கி கடன் வட்டியுடன் சேர்த்து ₹9,000 கோடிக்கு மேல் நிலுவையில்  உள்ளது. இதை மீட்க வங்கிகள் போராடி வருகின்றன. அவர் மீது கடன் பாக்கி மட்டுமின்றி, வரி பாக்கி, அந்நிய செலாவணி முறைகேடு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.   கடனை அடைக்க முன்வராத மல்லையா, கடந்த 2016 மார்ச் 2ம் தேதி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். லண்டனில் பதுங்கியுள்ள அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் லண்டன்  நீதிமன்றத்தில் நடந்தன.  லண்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்த இந்திய அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. ஓராண்டு விசாரணைக்கு பிறகு, கடந்த டிசம்பர் 10ம்  தேதி இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, விஜய்மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அமைச்சர் சாஜித்  ஜாவித்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

 இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதாக மல்லையா அறிவித்திருந்தார். இதற்கிடையே, நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வந்தது.  இந்நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் நேற்று அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். இது இந்த வழக்கில் மத்திய  அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த உத்தரவுக்கு எதிராக மல்லையா தரப்பு மேல் முறையீடு செய்ய 2 வாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஓட்டுநர் பார்த்த ‘படத்தால்’ லண்டன் நகர ரயிலில் பயணிகள் தர்மசங்கடம்