×

கோயில் திருவிழாக்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது

சென்னை: சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்களின் நகை திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.  அதன்பேரில், அசோக் நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி  கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, 3 பெண்கள் கூட்ட ெநரிசலில் பெண்கள் அணிந்து இருக்கும் நகைகளை திருடும்  காட்சிகள் பாதிவாகி இருந்தது. பின்னர் 3 பெண்களின் புகைப்படங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், பழைய குற்றவாளிகளான ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த ஜானகி (50), பத்மா (40), நாராயினி (34) என தெரியவந்தது. இவர்கள் மீது விருகம்பாக்கம், வடபழனி, அசோக் நகர் காவல்  நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 3 பேரும் கோயில் திருவிழாக்களை குறிவைத்து கடந்த ஓராண்டாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது  தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 16 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,temple festivals , Andhra,women,arrested ,temple festivals
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது