×

ரூ.10 லட்சம் முறைகேடு செய்த மாநகராட்சி விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட்: ஆணையர் கார்த்திகேயன் அதிரடி

சென்னை: பள்ளிகளுக்கு விளையாட்டு பொருட்கள் கொள்முதல் செய்ததில் ₹10 லட்சம் முறைகேடு செய்தாக சென்னை மாநகராட்சியின் விளையாட்டு துறை அலுவலர் ஒருவரை  சஸ்பெண்ட் செய்து ஆணையர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு பிறிப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் கட்டுபாட்டில் 200க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இதைத் தவிர்த்து மாநகராட்சி பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள்  பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மைதானங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவது,  பல்வேறு விளையாட்டு பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி  கல்வித் துறையால் செய்யப்படும். உடற்பயிற்சி கூடத்திற்கான உபகரணங்களும் கொள்முதல் செய்யப்படும்.

இந்நிலையில் இந்தப் பணிகளில் பல லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன்படி லஞ்ச ஒழிப்பு துறை  அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு  முன்பு விசாரணை மேற்கொண்டனர்.  இது தொடர்பான விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறையினர் மாநகராட்சிக்கு சமர்பித்துள்ளனர். அதில், சென்னை மாநகராட்சியில் விளையாட்டு அலுவலராக பொறுப்பு வகித்துவரும் சரவணன் ₹10 லட்சம் அளவிற்கு முறைகேடு செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சென்னை  மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் முறைகேட்டில் ஈடுபட்ட விளையாட்டு துறை அலுவலர் சரவணனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Municipal Officer ,Commissioner , Municipal Officer,Suspended ,Rs 10 Lakh Rape, Commissioner, Karthikeyan Action
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...