×

பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ் பெர்டன்ஸ் சாம்பியன்

மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உ:ள்ளூர் வீராங்கனை அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவுடன் (32வது ரேங்க்) மோதிய கிகி பெர்டன்ஸ் (8வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை  பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த பாவ்லியுசென்கோவா 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ரஷ்ய வீராங்கனையின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து ஆதிக்கம் செலுத்திய பெர்டன்ஸ் 6-2, 3-6, 6-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை  முத்தமிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Petersburg ,berthens champion , Petersburg,tennis, berthens, champion
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...