×

இதுவே கடைசி சீசன்...: மெக்கல்லம் அறிவிப்பு

சிட்னி: நடப்பு பிக் பாஷ் டி20 சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 தொடரில், பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வரும் மெக்கல்லம் (37 வயது) கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அதன்  பிறகு பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வந்தார். இந்த நிலையில், நடப்பு பிக் பாஷ் டி20 தொடருடன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற  உள்ளதாக நேற்று அறிவித்தார்.அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் நடந்த ஆட்டத்தில் அவர் 4 ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும்  மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,McCullum , This, last season ,McCullum's,announcement
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...