×

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்க கிரீடம் திருடிய வாலிபரின் தெளிவான புகைப்படம் வெளியீடு: தகவல் தெரிவிப்பவருக்கு தக்க சன்மானம் என அறிவிப்பு

திருமலை: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்க கிரீடம் திருடிய வாலிபரின் தெளிவான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வாலிபர் குறித்து  தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு  சொந்தமான திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ள கல்யாண  வெங்கடேஸ்வர சுவாமி துணை சன்னதியில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, தேவி பூதேவி தாயாருக்கு அலங்கரிக்கக் கூடிய 3 கீரிடங்கள் கடந்த 2ம் தேதி  மாயமானது.

இதுகுறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  கோயிலில் வைக்கப்பட்டுள்ள 12 சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்கிடமாக வாலிபரின்  புகைப்படத்தை அடையாளம் கண்ட போலீசார் அந்த புகைப்படத்தை நேற்று வெளியிட்டனர். புகைப்படத்தில் காணப்படும்  வாலிபர் குறித்து தகவல்  தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் மேலும் தகவல் தருபவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tirupathi Govindaraja Swamy ,Announcement , Tirupathi Govindaraja Swamy temple, golden crown, photo, information, rewards
× RELATED பிதா திரைப்பட அறிவிப்பு விழா!!