×

ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்.... தோனி முன்னேற்றம்

துபாய்: ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி 122 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோஹித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். 821 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஷிகர் தவண் 744 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 49 ரன்களும் சேர்த்த இந்தியாவின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்தார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 808 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 719 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், சாஹல் ஒரு இடம் முன்னேறி 709 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீசி 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் முதல் 10 இடங்களில் எந்த இந்திய வீரர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC ODI ,Bumra ,Kohli ,Dhoni , ICC,ODI,rankings,Kohli,Bhumrah,dominate,Dhoni
× RELATED ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு பாபர் மீண்டும் கேப்டன்