×

உ.பி.யில் காந்தி உருவப்படம் அவமதிப்பு.. இந்து மகாசபை நிர்வாகிகளை கைதுசெய்ய வலியுறுத்தி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்

சென்னை: உத்தரபிரேதசத்தில் மகாத்மா காந்திபடிகளின் உருவ படத்தை துப்பாக்கியால் சுட்டு அவமதிப்பு செய்தவர்களை தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யக் கோரி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளுவர் கோட்டம் அருகே அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காந்தியடிகளை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரபிரேதச அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் காந்தியடிகளை சுட்டுக்கொன்றவர்கள் இன்னும் அதே வன்மத்துடன் நடவடுவது ஆபத்தானது என்று கூறியுள்ளார். காந்தியடிகள் உருவப்படத்தை அவமதித்தை கண்டித்து தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 30-ம் தேதி காந்தியடிகளின் நினைவு நாளில் நாடே அஞ்சலி செலுத்திவந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் காந்தியடிகளின் உருவப்படம் அவமதிக்கப்பட்டது. இந்து மகா சபா தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே உள்ளிட்டோர் காந்தியடிகள் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு அவமதிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gandhi ,portrayal ,Tamil Nadu ,UDF ,mosque executives ,arrest , demonstration,Chennai,insult,Hindu Mahasabha,executives,Gandhi,UP,
× RELATED தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம்...