×

காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார் ராகுல் காந்தி... திருநாவுக்கரசர் பேட்டி

டெல்லி: கட்சியில் ராகுல் காந்தி தனக்கு எந்த பணி கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் செய்வேன் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில்,

காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான ஆலோசனைகளை ராகுல் காந்தி வழங்கினார். இரண்டரை ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததே சாதனைதான் என திருநாவுக்கரசர் கூறினார். மேலும் அமெரிக்கா சென்ற போது நடிகர் ரஜினிகாந்த்தை நான் சந்திக்கவில்லை. ராகுல் காந்திக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், 4 செயல் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்தது. இதனை அடுத்து திருநாவுக்கரசர் டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ராகுல் காந்தியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,party ,Congress , Rahul Gandhi ,suggestions,development ,Congress party, Tirunavukkar
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...